ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பையே | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்று, ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார் என எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில், புதிய ஆண்டுக்கான கூட்டத்தொடரை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பித்து வைத்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே எம். ஏ. சுமந்திரன் எம். பி. மேறகண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து பாராளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். அதற்காக எழுந்தார். எனினும், யோசித்தவர், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

ஆனால், பாராளுமன்றை விட்டு வெளியே வரும்போது 'லொபி'யில் தமக்கு முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் தமது கோபத்தை சம்பந்தன் ஐயா காட்டினார். ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன். இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்னை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை. இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது - உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள் என்று சம்பந்தன் ஐயா சீற்றத்துடன் கூறினார்.

இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பஸில் ராஜபக்ச விடயத்தைச் சமாளித்து, 'தாங்க்யூ, தாங்க்யூ...!' என்று கூறி அங்கிருந்து அகன்றார்" - என்றும் சுமந்திரன் கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பையே | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பையே | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பையே | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பையே | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பையே | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More