
posted 6th January 2022

மன்னார் மறைமாவட்டத்தில் ஏழைகளின் தோழனாக திகழ்ந்து சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 37 வது நினைவேந்தல் இன்று.
மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை பங்கில் பணியாற்றும்போது கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 37 வது ஆண்டு நினைவேந்தல் தினம் வியாழக்கிழமை (06.01.2022) வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன் அடிகளார் தலைமையில் நினைவு கூறப்பட்டது.
இன்றையத் தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருட்பணி சேவியர் அடிகளார் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அவருடன் இருந்து கொல்லப்பட்டவர்களின் நினைவாகவும் ஆயர் அவர்களால் தீபம் ஏற்றி அக வணக்கம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் இவரை சுட்டுக் கொன்ற வேளையில் கண்கண்டவர்கள், பங்குத் தந்தை மற்றும் ஆயர் அவர்களால் இரங்கல் உரைகளும் இடம்பெற்றது.
1983 இல் நடைபெற்ற பாரிய இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு தென் பகுதியிலிருந்து மன்னாருக்கு இடம்பெயர்ந்து வந்த மக்களை குடியேற்றி அவர்களுக்கு ஒரு காப்பரணாகவும், துணையாகவும் இருந்து வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக் கொடுத்து வந்தவர் அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் என்பதும் இங்கு விஷேடமாக குறிப்பிடப்பட்ட விடயமாகும்.
இந் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வங்காலை மக்கள் அன்றையத் தினம் தங்கள் தொழில்களை முடக்கி இந் நிகழ்வில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House