கொரொனா தொற்று அப்டேற் (26.01.2022)

யாழ்ப்பாணத்தில் 5 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (26) 9 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையிலேயே இந்த விடயம் வெளியானது.

அந்த சோதனை அறிக்கையின் பிரகாரம்;

யாழ். போதனா மருத்துவமனையில் மூவரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவரும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஒருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் இருவருமாக 9 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் மேலும் 23 போ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளாா்.

நேற்று (26) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

30 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 369 ஆகும்.

கொரொனா தொற்று அப்டேற் (26.01.2022)

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House