குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தல்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (05) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணிகளான சுகாஸ், காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House