குடும்பப் பிரச்சனையில் பொலிசாரின் காட்டுமிராண்டித் தாக்குதல்

வல்வெட்டித்துறைப் பொலிசர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை(15) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி பகுதியில் இடம்பெற்ற குடும்பப் பிரச்சனை தொடர்பாக சனிக்கிழமை(15) இரவு வல்வெட்டித்துறை பொலிஸார் அங்கு சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் குலசேகரம் மிதுலன் (வயது- 24) என்பவர் அந்தரங்க பகுதியில் பொலிசார் மிதித்ததாகத் தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அப்புக்குட்டி வசந்தன் (வயது- 40) என்பவர் பொலிஸார் தாக்கியதில் காயமடைந்த நிலையில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். காயமடைந்த நிலையில் தடுப்புக்காவலில் மேற்படி நபர் வைத்திருப்பது தொடர்பில் உறவினர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து காயமடைந்த நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை(16) காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சனையில் பொலிசாரின் காட்டுமிராண்டித் தாக்குதல்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House