
posted 27th January 2022
பலாங்கொடை, கூரகல தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை, அகற்றுவதற்கு எடுக்கப்படும் பேரினவாத, இனவாத செயற்பாடுகள் குறித்து நிந்தவூர் பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் கவலையும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களது, 4 ஆவது சபையின் 46 ஆவது கூட்ட அமர்வு இன்று வியாழக்கிழமை 27.01.2022 சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், விசேடமாக எதிர்வரும் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை சபை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன், குறிப்பாக பலாங்கொடை கூரகல, தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பாக சபையில் ஆராயப்பட்டு பெரும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் நல்லிணக்கத்திற்கும், இன நல்லுறவுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்படும் பேரினவாத, இனவாத செயற்பாடான தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு எடுக்கப்படும் செயற்பாட்டுக்கு உறுப்பினர்கள் பலரும் பலத்த கண்டனம் தெரிவித்ததுடன், இந்த நடவடிக்கை;கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த அமர்வின்போது சபைத் தவிசாளர் தாஹிர், பலாங்கொடை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் சபை உறுப்பினர்களது கவனத்திற்கு கொண்டுவந்து உரையாற்றினார்.
தவிசாளர் எம்.ஏ.எம்.தஹிர் உரையாற்றுகையில்,
“பலாங்கொடை கூரகலை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு எடுக்கப்படும் விவகாரம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பள்ளிவாசலை இடித்து அகற்றிவிட்டு அதனை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி கடந்த 2015 ஆம் ஆண்டிலும் வலுப்பெற்ற போதிலும், அப்போது எழுந்த எதிர்பலைகளால் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டு கை விடப்பட்டது.
ஆனால், பேரினவாத, இனவாத சக்திகளின் இந்த முயற்சி மீண்டும் தலை தூக்கியுள்ளமை கவலைதரும் விடயமாகும்.
கூரகல, ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றிக் கொள்ளுமாறு அதன் நிருவாகசபையிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக, நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் ஸ்தாபகர்வத்துரகும்புரெ தர்மரத்ன தேரர் என்பவர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.
அங்குள்ள ஸியாரம் மாத்திரம் இருக்க, விரைவில் தகரக்கொட்டிலிலான பள்ளிவாசல் அகற்றப்படாவிட்டால் பலாத்காரமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்திருந்தார்.
குறித்த ஜெய்லானி பள்ளிவாசல் பிரதேசத்தை அண்மித்து பாரிய அளவில் பௌத்த தாது கோபுரம் உட்பட தர்ம மண்டபம், வீதிக்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் என்பன கூரகல விஹாரை வளாகத்தில் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, குறித்த பள்ளிவாசலுக்கு எதிரான நெருக்கடி உருவாகியுள்ளதாகவும் அறிய வருகின்றது.
இன்றைய அரசின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை இந்நாட்டு முஸ்லிம்கள் சந்தித்துவரும் நிலையில், அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான ஓர் உந்துதல் செயற்பாட்டின் வெளிப்பாடா இதுவெனவும் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.
எது எப்படியிருப்பினும் முஸ்லிம் சமய கலாச்சார திரணக்களமும், முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்களும் தலையிட்டு, பள்ளிவாசலை அகற்றுவதையோ, இடமாற்றுவதையோ தடுக்க வேண்டும்.
இனவாதிகளின் செயற்பாட்டுக்கு வரலாற்று பெருமைமிக்க ஜெய்லானி பள்ளிவாசல் இரையாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House