ஓராண்டு பூர்த்தி

இலங்கையில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையிட்டு இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைய கொழும்பு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் குறித்த தடுப்பூசி ஓராண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது கொவிட் மற்றும் ஒமிக்ரோன் பரவல், தடுப்பூசி ஏற்றலின் அவசியம், நாட்டில் மொத்தமாகவும், பிரதேச மட்டங்களிலும் இதுவரை ஏற்றப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் பூஸ்ட்டர் தடுப்பூசிகள் தொடர்பான விளக்கங்களும், விழிப்பூட்டல்களும் இடம்பெற்றன.

குறிப்பாக இந்த நிகழ்வுகளின் போது கொவிட் - 19 பரவல் காலத்தில் தமது உயிர்களையும் துச்சமாகக் கருதி கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்கைகள் அளிப்பதிலும், பி.சீ.ஆர் அன்டிஜன் பரிசோதனைகளைப் பரவலாக முன்னெடுப்பதற்கும் பெரும் பங்காற்றிவரும் சுகாதாரத்துறை சார்ந்த சகல தரப்பினருக்கும் பெரு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் குறித்த ஓராண்டு நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசி திட்ட ஓராண்டு நிறைவு நிகழ்வில் கொவிட் தடுப்பு செயலணி உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவசல் நிருவாகத்தினர், பாடசாலை அதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எல்.எம்.றைஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.எம்.சித்தீக் கொவிட் ஒழிப்பு, தடுப்பூடு ஏற்றல் தொடர்பாக விளக்கமளித்தார்.
அதேவேளை மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது மக்கள் அசமந்தம் காட்டுவதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். றைஸ் கவலை வெளியிட்டார்.

இந்த பின்னடைவை நிவர்த்திப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விமர்சனங்களுக்கப்பால் பொது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் மௌலவி கமறுதீன் உட்பட மேலும் பலரும் உரையாற்றினர்.

ஓராண்டு பூர்த்தி

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House