
posted 8th January 2022
“தமிழ்ப்பேசும் மக்களாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் எத்தகைய கசப்புணர்வுகளையும் மறந்து ஒன்றித்தே பயணிக்க வேண்டும். அன்றேல் எதிர்காலத்தில் பேரின வாதத்தின் பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.”
இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறினார்.
பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற, தரம் ஐந்து புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்முனை தமிழ் கோட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் குறித்த தரம் 5 மாதிரி வினாப்பத்திரங்கள் நிகழ்வின்போது கையளிக்கப்பட்டன.
இதனைகையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் அழகக்கோன் விஜயரட்ணம் பொன்னாடை போர்த்தி கௌரவமளித்தார்.
கல்முனை தமிழ் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர். சாணக்கியன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடகிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குரிய கல்வி, சமூக பொருளாதார, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும், அதற்கான பலம் பெறவும் ஒன்றுபட்டு பயணிப்பதுடன், மாகாண சபை முறைமையைப்பலப்படுத்தவும் வேண்டும்.
அன்றேல் எதிர்காலத்தில் வடகிழக்கு தமிழ்பேசும் மக்கள் நெருக்கடியான நிலமைகளுக்குள் தள்ளப்படும் நிலமையே ஏற்படும்.
இன்று வடக்கிலும், கிழக்கிலும் ஆளுநர் அதிகாரங்களே மேலோங்கி நிற்கின்றது. இதனால், எமது புலம்பெயர் உறவுகள், அமைப்புக்களிடம் எமது பிரதேசங்களின், மக்களின் அபிவிருத்திக்காக உதவிகோரும் சந்தர்ப்பங்களும், சம்மதங்களும் இருப்பினும் நேரடியாகப் பெறமுடியாத நிலமையே உள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுநர், தமண, உகன, தெஹியத்த கண்டிய போன்ற சிங்களப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் அக்கறை காட்டிவருகின்றாரே தவிர தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலமையே காணப்படுகின்றது.
இந்த நிலமையில் கடந்த 74 வருடகாலமாக அரசியல் உரிமைக்காகப் போராடி வருகின்றோம். அதேபோல் தமிழர்களும், முஸ்லிம்களும் வேறுவேறாகப் பிரிந்து பயணித்தால் நாம் நமது உரிமைகளைப் பெறவே முடியாது.

எ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House