ஏன் அமுல்படுத்த முடியாது?
ஏன் அமுல்படுத்த முடியாது?

இரா. துரைரெத்தினம்

நடைமுறையிலுள்ள மாகாணசபை முறைமையை ஏன் தற்காலிகத் தீர்வாக ஏற்றுக் கொண்டு அமுல்படுத்த முடியாது? என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா. துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்

இது விடயமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;

தழிழர்களுக்கான தீர்வு சுயாட்சியாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு 32 வருடங்களுக்கு மேலாக நடைமுறையிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும்.

இது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் வரவேற்க்கத்தக்கது. இச்சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

13ஆவது திருத்தச்சட்ட அரசியல் அதிகாரத்திலுள்ள சில அதிகாரங்கள் மாகாண முறைமைக்குக் கீழ் கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசிடமே உள்ளன. பல விடயங்கள் மத்திக்கும், மாகாணத்திற்கும் பொதுவாக உள்ளன. சில விடயங்கள் மட்டுமே மாகாணத்திற்கென தனியாக உள்ளன.

13ன்றைப் பொறுத்தவரையில் சிறுபான்மை இனத்திற்காக வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு மாகாண சபையாக இயங்கி வந்த நிலையில் பல அதிகாரங்கள் மாகாணசபை நிருவாகத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டன. இது காலப் போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு இணைத்த முறைமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாண சபை நிருவாகம் கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது. இத்தோடு, மாகாண நிருவாகத்திற்கென உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களான பிரதேச செயலகத்திற்கு கட்டுப்பட்ட சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டதோடு, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி, நீதி தொடர்பான அதிகாரங்கள், விவசாய, நீர்பாசனத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரங்கள், வரி அறவீடு, பொதுச்சேவை, மற்றும் பொது நிருவாகத்தின் கீழுள்ள அதிகாரங்களை மத்திய அரசு தனது கையில் எடுத்துக் கொண்டது. இத்தோடு, சபையில் தீர்மானிக்கப்படுகின்ற நியதிச் சட்டங்கள், உபவிதிகள் போன்றவைகளை தீர்மானிக்கும் பட்சத்தில் இன்னும் பல அதிகாரங்களை மாகாண சபையால் அமுல்படுத்த முடியும். சபையில் எடுக்கும் தீர்மானங்களை ஆளுநர் கேள்விக்கு உள்ளாக்கும் பட்சத்தில் நீதி வேண்டி நாடுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. சில ஆலோசனைகளை நீதியின் முன் பெறவேண்டும். செயல்முறையில் முன்னேற்றகரமாக செயற்படும் பட்சத்தில் இன்னும் சில அதிகாரங்களை அமுல்படுத்த முடியும்.

குறிப்பிட்ட அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அதிகாரங்கள் மாகாணசபை முறைமையின் கீழுள்ள நிலையில் முன்பு இல்லாமல் இருக்கும் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கும் தமிழர்கள் ஆகிய நாங்கள் உள்ளதை சிறப்பாக செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.

இதேவேளை அரசு சிறுபான்மை இனத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமலாக்குவதோடு, புதிய அதிகாரங்களைத் தர மறுக்கின்ற செயல் வடிவத்தை இல்லாமலாக்குவதற்கும், சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் என்பது குறிப்பாக எமது கையில் உள்ளவையாகும். கையில் உள்ளவற்றை நிராகரித்து விட்டு நாம் என்ன செய்யப் போகின்றோம்?

எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், பலவீனம் அடைந்து, நலிவடைந்து, களைப்படைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியத்தையும், அபிவிருத்தியையும் எமது சமூகம் தேவையென உள்ள நிலையில் நாம் உள்ளவற்றை ஏன் தற்காலிகமாக அமுல்படுத்த முடியாது?

எனவே உள்ளவற்றையும் போட்டு உடைக்காமல், உள்ளவற்றை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடைமுறையிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கும், பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்டு மத்திய அரசாங்கத்தால் தடுத்து வைத்துள்ள அதிகாரங்களை பெறுவதற்கு ஏன் அரசுடன் பேச முடியாது? எமது நாடு இலங்கை. இலங்கைக்குள் தீர்வை பெறுவது ஒரு ஆரோக்கியமான விடயமே. நடைமுறையிலுள்ள மாகாணசபை முறைமையை ஒரு சில கட்சிகள் நிராகரித்தல் என்பது அக் கட்சியின் கொள்கையாகும். ஆனால் மக்களால் 33வருடங்கள் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அம் மக்கள் பிரதிநிதிகளால் செயல்வடிவம் கொடுத்து மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஏன் தற்காலிகமாக அமுல்படுத்த முடியாது? இது மக்களின் ஆணை. மக்கள் இதை நிராகரிக்க வில்லை.

ஏன் அமுல்படுத்த முடியாது?

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B