
posted 25th January 2022
ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான உதவி ஆணையாளராக இ.திரவியராஜ் பதவி ஏற்றுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் அவர் தமது கடமைப்பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளார்.
சிறந்த அரச நிருவாக சேவை அதிகாரியான உதவி ஆணையாளர் திரவியராஜ், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரசேத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
குறித்த ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளராகப் பதவிப் பொறுப்பேற்கும் வரை இவர் பொத்துவில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் அத்தியாவசிய முக்கிய திணைக்களமான ஆட்பதிவு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பொறுப்பினை நீதி, நேர்மையுடனும்,
மக்கள் சேவையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பொறுப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக உதவி ஆணையாளர் திரவியராஜ் உறுதி பூணத்தெரிவித்தார்.
கிழக்கு மண்ணில் பிறந்த தனக்கு இத்தகைய கிழக்கின் உயர்பதவி ஒன்றுகிடைத்தமையையிட்டு அகமகிழும் அதே வேளை,
எமது மக்களுக்கு சேவையாற்றும் சந்தரப்பம் இதன் மூலம் கிடைத்தமை சிறந்த சந்தரப்பமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House