இலங்கையில் அனைத்து வீதிகளிலும் சைக்கிள்

இலங்கையில் அனைத்து வீதிகளிலும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஒரு பாதையை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது பயணிக்கும் வாகனத்திற்கு ஒரு கிலோ மீற்றருக்கு அரசு ரூ.103.56 செலவழிக்க வேண்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோமீற்றருக்கு 236.48 ரூபாயை மிச்சப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்திற்கு 339.98 ரூபாய் இலாபம் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் அனைத்து வீதிகளிலும் சைக்கிள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House