
posted 21st January 2022
அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்னைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றுக் வியாழக்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அரசியல் தலைவர்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்ட வேண்டும். அமைச்சரவைக் கூட்டத்தில் அல்லது ஆளும் கட்சிக் கூட்டத்தில் மாத்திரமே தமது கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும்.
இந்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களித்தது ஒவ்வொருவரும் அரசனாக்குவதற்கு அல்ல. எனவே ஜனாதிபதியை தெரிவு செய்தால் அந்த ஜனாதிபதியின் கொள்கையை பின்பற்றவேண்டும்.
நாம் அனைவரும் தனித்து ஆட்சியமைக்க முயலாமல் மக்களை ஆள முயற்சித்தால் சிறப்பாக இருக்கும். தற்போது உலகளாவிய ரீதியில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கையிலும் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே அரசனாவதற்கு போராடுவதை விடுத்து, மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களை அரசர்களாக முடியும்.
எனவே, தனிப்பட்ட கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House