
posted 13th January 2022
சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட மீசாலை மற்றும் கிராம்புவில் பிரதேசங்களில் பிரதேச சபையின் அனுமதி பெறாமல் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஸ்மாட் லாம்போல் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு தொலைத் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், தாம் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர் என்று தென்மராட்சி பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, யாழ். மாநகர சபை எல்லைக்குள் ஸ்மார்ட் லாம்போல் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை.
இந்த நிலையிலேயே, சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட மீசாலை மற்றும் கிராம்புவில் கிராமப் பகுதிகளில் ஸ்மார்ட் லாம்போல் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் அந்தப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், சாவகச்சேரி நகர சபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதனிடம் செய்தியாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, “குறித்த கோபுரங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன என்று பொதுமக்கள் நகரசபைக்கு முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து எமது அதிகாரிகள் சென்று நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்கியிருந்தனர். இந்நிலையில், அந்தக் கோபுரங்கள் நகரசபையின் எந்த அனுமதியும் பெறமால் நிர்மாணிக்கப்பட்டு, சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.
வடக்கில் குறித்த தனியார் தொலைதொடர்பு நிறுவனம் ஸ்மார்ட் லாம்போல் என்ற பெயரில் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க முற்பட்டிருந்த போது குறித்த தொலைத்தொடர்பு கோபுரங்களால் சிறுவர் முதல் கர்ப்பவதி பெண்கள் வரை பலருக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்று மக்களிடையே அச்சம் நிலவி வருகின்றது.
இதேவேளை, கோவில் காணி மற்றும் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான காணிகளிலேயே குறித்த கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House