
posted 25th January 2022

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
பலாங்கொடை , கூரகல பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பள்ளிவாயல் நிர்வாகம் இடமளிக்க கூடாது என்பதே எமது கட்சியின் தொடரான நிலைப்பாடாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பலாங்கொடையிலிலுள்ள பள்ளிவாயலை கூரகலவில் இடித்துவிட்டு அதனை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி என்பது சுமார் பத்து வருடங்களாக நடைபெறுகிறது. இது விடயம் 2015ம் ஆண்டு வலுப்பெற்ற போதும் பள்ளிவாயலை இடம்மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருந்தோம்.
மஹிந்த ஆட்சியில் பள்ளிவாயல்களுக்கு ஆபத்து என்றுதான் முஸ்லிம்களை மஹிந்தவை எதிர்த்து ரணில், மைத்திரி, சஜித் ஆட்சியை கொண்டு வந்தார்கள். ஆனால், இவர்களின் ஆட்சியில்தான் இதுவிடயம் பாரதூரமாகியதுடன் இதை எமது கட்சி பகிரங்கமாக கண்டித்திருந்தது.
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது சில பள்ளிவாயல்கள் மீது கல்லெறியப்பட்டது. ஆனால் எந்தவொரு பள்ளிவாயலும் இடிக்கப்படவில்லை. தம்புள்ள பள்ளிவாயலை இடித்துவிட்டு அதனை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தபோது இதற்கு ஹக்கீம், ரிசாத் போன்றோர் தமது அமைச்சு பதவிகளை தக்கவைக்க ஆமாம் போட்டபோதும், எமது கட்சி மட்டுமே அதனைக் கடுமையாக நிராகரித்தது. பள்ளியை இடமாற்றுவது எதிர்காலத்தில் பல பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு இடம்மாற்றம் செய்வதற்கான வரலாற்று ஆதாரமாக ஆகிவிடும் என கடுமையாக எதிர்த்தோம்.
இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொண்டதுடன், அது விடயத்தை கிடப்பில் போட்டதையும் கண்டோம். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போற்ற வேண்டிய முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் நன்றி மறந்ததை கண்டோம்.
ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் தம்புள்ள, கூரகுல பள்ளிகளை இடம் மாற்ற முயற்சி எடுக்கப்பட்டும் அதற்கு மஹிந்த அரசு இடமளிக்கவில்லை. அதன் காரணமாக இன்றுவரை கூரகுல பள்ளிவாயல் அதே இடத்தில் உள்ளது. ஆனால் பலாங்கொடை கூரகல பள்ளிவாயலை உடைப்பதற்கு கடந்த நல்லாட்சியில்தான் மிகப்பெரிதாக அமைச்சரவை மூலம் முடிவெடுக்கப்பட்டது என்பதை அன்றைய கலாசார அமைச்சர் நந்த மித்ர ஏகநாயக்க தெரிவித்திருந்தார். அப்போதும் ஹக்கீம், ரிஷாத் கோஷ்டியினர் அமைச்சரவையில் இருந்து கொண்டு புரியாணியை கணக்கு பார்ப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
இதை அன்றே நாம் கண்டித்தோம். இது பற்றிய எமது கண்டனம் 3.5.2015ல் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்தது.
இதன் காரணமாக இது விடயம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது இதனை மீண்டும் தூசு தட்டும் முயற்சி நடக்கிறது. ஆனாலும், இந்த விடயத்தை பெரிதுபடுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிறந்த ஆட்சியை குழப்பி முஸ்லிம்களுக்கெதிரான ஆட்சி போல் காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகமும் எமக்குள்ளது.
ஆகவே இது விடயத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தலையிட்டு பள்ளிவாயலை வேறு இடம் மாற்றுவதை தடுக்க வேண்டும். அதற்கும் முடியாமல் பள்ளிவாயலை உடைக்க இனவாதிகள் முயற்சி எடுத்தால் அவர்கள் உடைத்து விட்டு போகட்டும். அப்போது பள்ளிவாயல் நிர்வாகம் உடைப்புக்கெதிராக நீதி மன்றம் செல்ல வேண்டுமே தவிர பள்ளிவாயலை இடம்மாற்ற நிர்வாகம் அனுமதிக்க கூடாது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House