
posted 10th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் - கலவரம் வெடித்தது
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தென்இந்திய சினிமா சங்கீதப் பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நிகழ்ச்சியை பார்வையிட பல ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த போதிலும் ஒருசிலர் அந் நிகழ்ச்சியை பார்வையிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் விரக்கதியடைந்த அவர்கள் தடையை உடைத்து அரஙகத்தினுள் அத்துமீறி நுழைந்தனர்.
இதன்போது, ஏற்பட்ட கலவரத்தில் கதிரைகள், தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின. இதைத் தொடர்ந்து 6பேர் வரை கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டனர். 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இக் கலவரத்தில் ஏற்பட்ட நெரிசலின்போது மயக்கமடைந்த, காயமடைந்த 12 பேர் வரையிலானோர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)