
posted 27th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வீதிகளை செப்பனிட்டு தருமாறு விவசாயிகள் கோரிக்கை
சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட வயல் வீதிகள் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பெரும் போக அறுவடை நடைபெறும் காலமாகையால் வீட்டு இடிபாடுகளைக் கொண்டு விவசாயிகள் வீதியை தற்காலிகமாக செப்பனிட்டு அறுவடை இயந்திரம் மற்றும் உழவு இயந்திரங்களை தமது வயல்களுக்குள் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகிலிருந்து ஆற்று ஓரமாக செல்லும் வீதி முற்றாக சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வயல்களினூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.
இருந்தும் சேதமடைந்த வயல் வீதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிப்பதற்கு முன் செப்பனிட்டு தர வேண்டுமென விவசாயிகள் கேட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)