
posted 19th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
மாபெரும் இரத்ததான நிகழ்வு
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவு ஏற்பாடு செய்த 14வது மாபெரும் இரத்ததான நிகழ்வு பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமுக சேவைப் பிரிவின் தலைவர் ஏ.எம். சாதிக் அவர்களின் தலைமையிலும் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். இத்ரீஸ் ஹசன் ஸஹ்வி அவர்களின் வழிநடாத்தலிலும் நடைபெற்ற இவ்விரத்ததான நிகழ்விற்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப். றஹ்மான், பொதுச் சுகாதார வைத்தியர் டொக்டர் ஏ.எல். பாறூக் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான சிரேஷ்ட தாதி உத்தியோகஸ்தர் எம்.எம். சுபைதா அவர்களின் தலைமையிலான ஊழியர்களும் பள்ளிவாசலின் நிருவாகிகளும் மற்றும் நிந்தவூர் அல் - ஈமான் சனமுக நிலைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)