மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறை திணைக்களத்துக்கு வழங்க திட்டம்?

உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறை திணைக்களத்துக்கு வழங்க திட்டம்?

மட்டக்களப்பு - மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டனர்.

இந்த வைத்தியசாலையை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் புனர்வாழ்வு பணியகத்திற்கும் கையளிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு நீதி அமைச்சருடன் சிறைச்சாலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 98 ஏக்கர் நிலப்பரப்பில் வவுணதீவு வாவியின் நடுவே மாந்தீவு அமைந்துள்ளது.

இங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குரிய தொழுநோய் பிரிவும் நோயாளர்கள் விடுதியும் உள்ளன.

நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலை, நோயாளர் விடுதி, பழமைவாய்ந்த கட்டடங்கள், மத ஸ்தலங்கள் உள்ளிட்டவற்றை விமானப்படையினரின் உதவியுடன் பார்வையிட்டனர்.

மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறை திணைக்களத்துக்கு வழங்க திட்டம்?

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)