
posted 17th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
மலையக மக்களுக்காகவும் உரத்து குரல் கொடுப்பேன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறிதரனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தம் நேற்று முன்தினம் (15) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதன்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, மலையக தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகத் தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும், தமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும் எனவும் சிறிதரன் உறுதியளித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)