
posted 11th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான தேவாலயங்களுள் ஒன்றான பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நேற்று முன்தினம் மாலை திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் விசேட திருப்பலி பூசைகள் நடைபெற்றுவந்ததுடன் திருச்சொரூப பவனி நடைபெற்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை பிறைனர் செலர் தலைமையில் மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி விசேட பூசைகள் நடைபெற்றன.
இந்த திருவிழா திருப்பலி பூஜையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் ஆயரால் நடத்தப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)