
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பிரதேச செயலகத்தில் சுதந்திர தினம்
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு மரணித்தவர்களுக்கென இருநிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், பிரதேச செயலாளர் அப்துல் லதீப் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரதின சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டனர். பிரதேச செயலாளர் அப்துல் லதீப் உரையாற்றுகையில், அரச உத்தியோகத்தர்கள் மக்களின் விடிவிற்காக அவர்களது மறுமலர்ச்சிக்காக சேவையாற்றுவதும் ஒருவகை சுதந்திரம்தான் எனக் கூறியதுடன் இனமத சமயவேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களையும் அவர்களது தியாகங்களையும் நாம் எளிதில் மறந்துவிட முடியாது எனக் கூறினார்.
நிகழ்வின் இறுதியில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சரீம் நன்றியுரைபகர்ந்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)