
posted 26th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பாடசாலைகளிடையேயான உதைபந்தாட்டப் போட்டி
அகில இலங்கை பாடசாலைகள் இடையிலான 18 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு தெல்லிப்பழை மகாஜன கல்லூரி முன்னேறியுள்ளது.
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இந்தச் சுற்றில் அநுராதபுரத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் குருநாகல் கவுசிகமுவ மகா வித்தியாலயத்தை தெல்லிப்பழை மகாஜன கல்லூரி எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி 7 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில் மார்ச் 9ஆம் திகதி களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை மகாஜன கல்லூரி எதிர்த்து ஆடவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)