பலாலி விமான நிலையத்துக்கு காணி விஸ்தரிப்பு - கிளர்ந்தெழுந்த மக்கள்

பலாலி விமான நிலையத்துக்கு காணி விஸ்தரிப்பு - கிளர்ந்தெழுந்த மக்கள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க சிவில் அமைப்புகள் தயாராகியுள்ளன.

வலி. வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் 3 ஆயிரம் ஏக்கர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இந்தக் காணிகளை விடுவிக்குமாறு பல தரப்பினரிடம் கோரிக்கைகள் விடுத்தும் - போராட்டங்களை நடத்தியும் இன்னும் அவை விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கென 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில், உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட குரும்பசிட்டி , கட்டுவன், குப்பிளான் கிராமங்களின் பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த கிராமங்களில் கிராம மட்ட அமைப்புகள் கூடி காணி சுவீகரிப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றன. அத்துடன், மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தவும் தீர்மானித்துள்ளன.

போராட்டத்துக்கு முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வட மாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரை சந்தித்து தமது எதிர்ப்பு - கோரிக்கையை முன்வைக்கவும் அவை தீர்மானித்துள்ளன.

பலாலி விமான நிலையத்துக்கு காணி விஸ்தரிப்பு - கிளர்ந்தெழுந்த மக்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)