
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
முல்லைத்தீவில் லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் தீக்கிரை
முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை, மேசை ஒன்றும், 120 லொத்தர் சீட்டுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையில் ஒழித்தவர் இலங்கையில் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த சந்தேக நபர், நீண்ட காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)