
posted 21st February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் என்ற 32 வயதான ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை; சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது
மன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதை உடைய குறித்த இருவரும் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி இந்த இரட்டை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டு இருந்தது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது - 42) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது - 56) ஆகியோரே உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)