பலவகைச் செய்தித் துணுக்குகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பனை மரக் குற்றிகளை ஏற்றிச்சென்றவர் கைது

(எஸ் தில்லைநாதன்)

சட்ட விரோதமாக 12 பனை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் சாவகச்சேரி மட்டுவிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அவற்றை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட 11 நாள் குழந்தையின் தாயார்

(எஸ் தில்லைநாதன்)

குழந்தை பெற்று 11 நாட்களேயான இளம் தாய் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவின் ஒன்பதாம் வட்டார பகுதியில் அவரின் வீட்டின் கிணற்றிலிருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

குழந்தையை பிரசவித்து 11ஆவது நாள் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தாங்கள் உறக்கத்தில் இருந்தநேரம் நள்ளிரவு நேரம் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கலாம் என்று வீட்டார் கூறியுள்ளனர். அவரைக் காணவில்லை என்று தேடிய நிலையில் காலை 8 மணியளவில் வீட்டு கிணற்றில் பார்த்தபோது சடலமாகக் காணப்பட்டார் என்றும் வீட்டார் மேலும் கூறியுள்ளனர்.

டெனிஸ்ரன் கீர்த்தனா (வயது 29) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அத்துடன் பெண்ணின் சடலத்தை உடல்கூறாய்வுக்கு உட்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

மடு காட்டில் கசிப்பு காய்ச்சியவர்

(எஸ் தில்லைநாதன்)

மடு - பண்டிவிரிச்சான் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, காட்டுப் பகுதியில் ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதனை உடைமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, மடுகந்தை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட பொருட்களுடன் மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மடுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

குருநகரில் சடலம் மீட்பு

(எஸ் தில்லைநாதன்)

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான குருநகருக்கு அண்மையாக உள்ள தடாகத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

சனிக்கிழமை (10) காலை சடலத்தை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலத்துக்கு உரியவர் அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் யாழ். போதனா மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)