
posted 19th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவராக பஹாத் தெரிவு
நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக நிந்தவூர் சிடிசன் இளைஞர் கழகத்தின் தலைவர் எம்.ஏ. பஹாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் மீள் புணரமைப்பு கூட்டம் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக , நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் MTM. சரீம் அவர்களும் மற்றும் நிந்தவூர் பிரதேசசெயலக நிர்வாக, வெளிக்கள, முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் நிந்தவூர் இளைஞர் சேவை அதிகாரி MIM. பரீட் அவர்களும் மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆசிரியர் இஸ்மத் மற்றும் நிந்தவூரின் முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத் தலைவர்கள், அனைத்து இளைஞர் கழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்காண பிரதேச மட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்தது.
அத்தெரிவில் நிந்தவூர் சிடிசன் இளைஞர் கழகத்தின் தலைவர் M.A. பஹாத் நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)