
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் 76ஆவது சுதந்திர தின விழா
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஏ.எம். றசீன் தலைமையில் நடைபெற்ற இந்த சுதந்திர தின நிகழ்வுகளை நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல், கத்தீப் பேஷ் இமாம் சம்மேளனம், உலமா சபை மற்றும் அல்குர்ஆன் மனன மத்ரஸாக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நம்பிக்கையாளர் சபை தலைவர் எம்.ஏ.எம். றசீன் தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன் மரநடுகை மற்றும் சுதந்திரதின உரைகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் உலமா சபையினர் மற்றும் அல் - குர் - ஆன் மனன கலாசாலைகளின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மௌலவி ஏ.பீ. இப்றாஹிம் (காஷிபி) சுதந்திர தினத்தையொட்டிய விசேட துஆ பிரார்த்தனையினை நிகழ்த்தியதுடன் கத்தீப் பேஷ் இமாம் சம்மேளன தலைவர் மௌலவி எம்.ஏ.சீ.எம். அப்துர் றஹ்மான் (சஹ்தி) விசேட சொற்பொழிவும் ஆற்றினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)