
posted 26th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
தெ.கி.பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் வைபவம்
இலங்கை தென்கிழக்கு பல்கைலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை நடத்திய “பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும்” பற்றிய குறுங்காலக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் சிறப்புற நடைபெற விருக்கின்றது.
கலை, கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத்துறை தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி, எம். அப்துல் ஜப்பார் தலைமையில், எதிர்வரும் 27ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக ஒலுவில் வளாக தொழில் நுட்ப பீட கேட்போர் கூடத்தில் மேற்படி சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெறும்.
வைபத்தில், பாராளுமனற் செயலாளர் நாயகம் குஷானி அனுஸா ரொஹநதீர பிரதம அதிதியகக் கலந்து கொள்வதுடன்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் மற்றும் கலை, கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், இந்த வைபவத்தில் குறித்த கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 246 மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த வைபவத்தை சிறப்புற நடத்துவதற்கான நெறிப்படுத்தலை அரசியல், விஞ்ஞானத்துறையின் தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பார், பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முஹம்மட்டுடன் ஒருங்கிணைந்து செய்துள்ளமையும், குறித்த குறுங்காலக்கற்கை நெறி மற்றும் அதன் சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்குமான அனுசரணையை USAID (யூஎஸ்எய்ட்) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் என்பன வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட அரசியல் விஞ்ஞானத்துறை இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து பல்கலைக்கழக உள்வாரி இளம் கலைப்பட்டதாரி மாணவர்களுக்கென குறித்த குறுங்காலக்கற்கை நெறியை வெற்றிகரமாக நடத்தி முடிந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)