
posted 12th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
திண்மக் கழிவுளை அகற்ற சிரமதானம்
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆறு மற்றும் குளங்களிலுள்ள நீர் கடலில் கலந்ததன் காரணமாக கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் போன்ற உக்காத திண்மக் கழிவுகள் பெருமளவில் சேர்ந்து காணப்பட்டன.
இதன் காரணமாக கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோரும், பொழுது போக்கிற்காக கடற்கரையோரங்களுக்கு செல்வோரும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகி வருவதனைக் கருத்திற் கொண்டு கல்முனை இளைஞர் அமைப்பும், பிரதேச மக்களும் கல்முனை விஷ்னு கோயில் கடற்கரை பிரதேசத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
பெண்கள் சிலர் கையில் பதாதைகளை ஏந்தி சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)