
posted 1st February 2024
திணறுவது ஏன்?
துயர் பகிர்வு
திணறுவது ஏன்?
மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத வடி சாராய பிரச்சனையில் திணறுவது ஏன் என வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள் இன்றைய தினம் இடம்பெற்ற போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
வடி சாரயப் பிரச்சனை மட்டக்களப்பில் பரவலாக பல இடங்களில் காணப்படுகின்றது இருப்பினும் புலனாய்வுப் பிரிவினர். வருடத்துக்கு ஒரு முறை மக்களுக்காக உயிர் நீர்த்த தத்தம் உறவுகளை நினைவு கூறி அஞ்சலி செய்யும் நாட்களில் நடக்கும் சம்பவங்களை மாத்திரம் புலனாய்வு செய்து கைதுகளை மேற்கொள்கின்றனர் அதில் கேக் கொடுத்தவர் வெட்டியவர் போன்றோரை கூட கைது செய்தார்கள். ஆனால் வருடம் முழுவதும் ஒவ்வெரு நாளும் நடக்கும் வடி சாரயப் பிரச்சனைக்கு மாத்திரம் முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன? எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)