
posted 28th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தரம் - 6 மாணவன் மீது தாக்குதல் ஆளுநர் விசாரணைக்கு பணிப்பு
வடமராட்சி - நெல்லியடியில் தரம் 6 இல் இணைந்த புதுமுக மாணவன்மீது தரம் பத்து மாணவ்கள் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பி. எஸ். எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர், வலயக்கல்வி பணிமனைக்கு ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவன், தாக்குதலை நடத்திய மாணவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்படும் அபயம் பிரிவினால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நெல்லியடியில் பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த 22ஆம் திகதி தரம் 6 மாணவனை தரம் 10ஐ சேர்ந்த மாணவர்கள் சிலர் தாக்கினர். இதில், பாதிக்கப்பட்ட தரம் 6 மாணவன் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)