
posted 16th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
ஜனநாயகத் தமிழ்க் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி இணைய அழைப்பு
தமிழரசுக் கட்சியை தமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்திருந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஏற்கனவே ஐந்து கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ்க் கூட்டமைப்பாக செயற்பட்டு வருவதாகவும், அதில் வேண்டும் என்றால் தமிழரசு கட்சி இணைந்து கொள்ளலாம்.
ஏற்கனவே தமிழரசுக் கட்சிக்குள் பதவி தொடர்பில் பிரிவுகள் காணப்படும் நிலையில், அவர்களது அரசியல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)