
posted 6th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க முன்னிற்கும் இளைஞர்கள்
இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில நேற்றையதினம் திங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை - சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்ததனால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடையச் செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைத்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த சுற்றுலாப் பயணத்தினை தாங்கள் ஆரம்பித்துள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)