
posted 27th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சுமந்திரன் எம். பியின் தாயார் காலமானார்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனின் தாயாரான புஷ்பராணி மதியாபரணன் (வயது 85) கொழும்பில் செவ்வாய்க்கிழமை (27) காலமானார்.
கொழும்பு - தெகிவளையிலுள்ள அவரின் மகளின் இல்லத்திலேயே செவ்வாய்க்கிழமை அவர் காலமானார். இவர், வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்தவராவார்.
சுமந்திரன் எம். பியின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை (29) கொழும்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)