
posted 1st February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சம்மாந்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், கணக்காளர் ஐ.எல் பாரீஸ் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், திணைக்களங்களின் பிரதிநிதிகள், மஜ்லிஸ் சூறா பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரதேச காணிப் பிரச்னைகள், மையவாடி மற்றும் பாடசாலைகளுக்கு காணி விடுவிப்பு விடயங்கள்,நீர்பாசனம் சார்ந்த முன்மொழிவுகளும் அதற்கான தீர்வுகளும், விவசாயம் சார்ந்த முன்மொழிவுகளும் அதற்காம தீர்வுகளும்,நகரமயமான கிராமங்களின் அபிவிருத்தி விடயங்கள் போன்றவர்கள் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)