
posted 29th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சம்மாந்ததுறை பிரதேச செயலக கணக்காளராக சர்தார் மிர்ஸா
இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த எஸ்.எல். சர்தார் மிர்ஸா சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த கடமைப்பொறுப்பேற்பு நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்சார், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஸ்ஸான்(நளீமி), சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ராஸீட் யஹியா, சம்மாந்துறை பிரதேச செயலக முன்னாள் கணக்காளர் ஐ.எம் பாரீஸ், அக்கரைப்பற்று பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம் தமீம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கணக்காளர் ஏ.கே. அஸ்கர், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆகீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவர் அக்கரைப்பற்று, தமன, காரைதீவு, அட்டாளைச்சேனை, இறக்காமம் போன்ற பிரதேச செயலகங்களில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)