
posted 21st February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 20.02.2024 செவ்வாய்க்கிழமை 5 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக காலை 10.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை கோப்பாயின் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸ்சன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)