
posted 2nd February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
குறைமாதக் கர்ப்பிணி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்
குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தார். கர்ப்பிணியான இத்தாய் கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னர் மறுநாள் 24ஆம் திகதி வீடு திருப்பியுள்ளார்.
பின்னர் இவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரண்டு மணத்தியாலங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)