கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்கல்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்கல்

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'எழுச்சிப் பொங்கல் விழா – 2024' எனும் தலைப்பில் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து நடத்திய இந்நிகழ்வின் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் கலந்து கொண்டார்.

108 பானைகளில் பொங்கல், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பொங்கல் விழாவில் பிரதி உபவேந்தர் கலாநிதி பிரபாகரன், கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் வினோவபா, விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் திருமதி புனிதா பிரேமானந்த ராஜா, வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ராஜேஸ்வரன், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி குணபாலசிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டார்கள். பல்கலைக்கழக பதிவாளர் பகிரதன், நிதியாளர் பாரிஸ் மற்றும் கல்விசார், நிர்வாக, கல்விசாரா அத்துடன் மாணவர்களின் பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக இது நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களின் நடனம், களி இசை, குழு நடனம், குழுப் பாடல், சிங்களப் பாடல், கண்டிய நடனம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்கல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)