
posted 27th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளர் கடமையேற்பு
கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள வை. ஹபீபுல்லாஹ் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி உட்பட பிரிவுத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேறிருந்தனர்.
இதன்போது மாநகர ஆணையாளர் தலைமையில் உத்தியோகத்தர்கள் அனைவரும் பதில் கணக்காளரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளராக கடமையாற்றி வருகின்ற ஹபீபுல்லாஹ் அதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)