
posted 26th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கலாநிதி மோகன் சுவாமிகளுக்கு மிக சிறந்த ஆன்மீகவாதிக்கான விருது
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகன் சுவாமிகள் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆன்மீகத்திற்க்கான விருது தமிழ்நாடு ABJ அறக்கட்டளையால் நேற்று (25;02/2024) கொழும்பில் தனியார் விடுதியில் நடத்திய விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ABJ அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மூத்த அறிவிப்பாளர் அப்துல் ஹமீத், பௌத்த மத குரு, உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதேவளே கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் காலை 10:45 மணிமுதல் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் பரா. ரதீஸ் அவர்களின் ஆன்மீக சொற்பொழி இடம் பெற்றுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த, விவேகானந்தா இந்து மகளிர் கல்லூரி, விவேகானந்தா தேசிய பாடசாலை, தி/இந்து மகாவித்தியாலயம், உவர்மலை விவேகானந்தா கல்லூரி, தி/ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலையில் கல்வி கற்கின்ற, 10 மாணவர்களுக்கு 70,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் - தொல்லியல் மற்றும் கலாசார சுற்றுலா கற்கையினை மேற்கொள்வதற்காக அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 50,000 நிதியும் கொடையளிக்கப்பட்டுள்ளது.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)