கச்சதீவு ஆலயத் திருவிழாவில் இலங்கையர்கள் பங்கேற்பு

உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கச்சதீவு ஆலயத் திருவிழாவில் இலங்கையர்கள் பங்கேற்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றனர். இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணித்துள்ளனர்.

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமரிசையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று இடம்பெற்றது.

நேற்று முன் தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சுரூபப் பவனி ஆகியன இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நேற்று காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி. ஜே. ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருவிழாவுக்கு இலங்கையில் இருந்து 4454 பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்திய பக்தர்கள் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

குறித்த திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள், ஜனாதிபதியின் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கச்சதீவு ஆலயத் திருவிழாவில் இலங்கையர்கள் பங்கேற்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)