
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
உதவிட விழைந்ந இளைஞர் தவறிவீழ்ந்து உயிர் துறந்தார்
மினிபஸ்ஸிலிருந்து இருந்து இறங்க முனைந்தவர்களுக்கு வழிவிட முயன்ற இளைஞர் மிதிபலகையிலிருந்து தவறிவிழுந்து பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்தார்.
நல்லூர் ஆலயத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வெள்ளி (23) காலை 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டானை சேர்ந்த ஏ. நிசாந்தன் (வயது 29) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றுபவராவார். பணி இடத்துக்கு பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த 750 வழித்தட மினி பஸ்ஸில் பயணித்தார்.
இந்த நிலையில், நல்லூர் கோயில் அருகே இறங்க முனைந்தவர்களுக்காக அவர் வழிவிட முயன்று கொண்டிருக்கையிலே அந்த மினிபஸ் நல்லூர் கோயில் முன்பாகவுள்ள வளைவில் திரும்பிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் அவ் இளைஞர் தவறி கீழே விழுந்தார். இதன்போது, அவரின் தலையில் பஸ்ஸின் சில்லு ஏறியதில் நசியுண்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
விபத்துக் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)