
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
ஆர். ஆர். காலமானார்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட பிரதித் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆர். ஆர். என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) (வயது 61) நேற்று காலமானார்.
அண்மையில், திடீரென நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (22) வியாழன்மாலை காலமானார்.
அவரின் இறுதிச் சடங்கு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (25) வவுனியாவிலுள்ள கட்சியின் பணிமனையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1980களில் இணைந்து கொண்ட இவர், உமா மகேஸ்வரன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை (புளொட்) தொடங்கியது முதல் அதில் இயங்கிவந்தார். 1989ஆம் ஆண்டு புளொட் அமைப்பு மாலைதீவை கைப்பற்றும் நோக்கில் சென்ற படையணியில் இவரும் ஒருவராக இருந்தார். அந்தச் சமயம் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவராவார். 5 வருட சிறையின் பின்னர் அவர் விடுதலையானார். தொடர்ந்தும் புளொட் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)