
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அம்பாறையில் கரி நாள் போராட்டம் முன்னெடுப்பு
நாட்டின் 76ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் கறுப்பு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுதந்திர தின நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதை ஏற்றே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)