Crime செய்திகள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கைத்தொலைபேசியை திருடி விற்றவர் கைது

(எஸ் தில்லைநாதன்)

வவுனியா நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, பழைய பஸ் நிலையப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஊடக நிறுவனம் ஒன்றில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்று திருட்டுப் போயுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டையடுத்து தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த கைத்தொலைபேசி நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், குறித்த தொலைபேசியை திருடி விற்ற நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாமியாரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருமகன்

(ஏ.எல்.எம்.சலீம்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்தார் எனக் கூறப்பட்டது. சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவும் மாமியார் வீட்டில் தனிமையில் இருந்தபோது மதுபோதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்தார். 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் எனப் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தமையையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தமையுடன் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர்.

தப்பிச் செல்ல முயன்ற வடக்கு இளைஞர்கள் சந்தைகத்தில் கைது

(எஸ் தில்லைநாதன்)

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கிரேக்க சுற்றுலா விஸாக்களை பயன்படுத்திச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று அதிகாலை கட்டாரின் டோஹாவுக்கு சென்று டோஹாவிலிருந்து, பாரிஸூக்குச் சென்று இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரை அடைவதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், ஆவண பரிசோதனை நடவடிக்கைகளின்போது குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞரைக் கொலை செய்து விட்டுத் தப்பி ஒட்டம்

(எஸ் தில்லைநாதன்)

முல்லைத்தீவு - மாங்குளம், தச்சடம்பன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் பயணித்த குறித்த இளைஞனை வழிமறித்த மற்றுமொரு இளைஞன் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்போது தாக்குதலில் 27 வயதுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Crime செய்திகள்

எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

(எஸ் தில்லைநாதன்)

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் நேற்றிரவு (24) சனிக்கிழமை தீமூட்டி எரிக்கப்பட்டது.

தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை உருட்டிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புபட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Crime செய்திகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

Crime செய்திகள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)