
posted 3rd February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இன்று 4 ஆம் திகதி (ஞாயிறு) விமரிசையாக இடம்பெறவுள்ளன.
நாட்டின் தலைநகர் கொழும்பு உட்பட மாவட்டங்கள், பிரதேச ரீதியாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான நிகழ்வு கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளதுடன், கலை நிகழ்வுகளின்றி முப்படைகளின் மரியாதை அணிவகுப்புக்களுடன் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இம்முறை சுதந்திரதின நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்தாதவிசின் பிரதம அதிதியாக, ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க நாட்டு மக்களுக்கு விசேட சுதந்திர தின உரையும் நிகழ்த்துவார்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் ஆளுநரின் ஏற்பாட்டில் இன்று மாலை 6.30 மணிக்கு பழைய கல்லடிபாலத்தில் கடைத்தொகுதிகளுடன் கூடிய உணவுத்திருவிழா உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இருப்பினும் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளதாக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி சகாயராஜன் தெரிவித்துள்ளதுடன், கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்துதுள்ளார்.
மேலும், சுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க வரவேற்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)