
posted 10th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
16 ஆவது பொது பட்டமளிப்பு விழா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றது.
பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இரு தினங்கள் பட்டமளிப்பு விழா இடம்பெறசிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் நெறிப்படுத்தலிலும், பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலும் இந்த பொதுப்பட்டமளிப்பு விழா சிறப்புற இடம்பெற்றது.
இதன்போது 1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும், 711 வெளிவாரி பட்டதாரிகளுக்கும் மொத்தமாக 2152 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பட்டமளிப்பு நிகழ்வில் தொழில் நுட்ப பீடத்டதினால் பரிந்துரைக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் பியசிறி அவர்களுக்கு கலாநிதி பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)