
posted 6th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஹசன் அலியை சந்தித்து கலந்துரையாடிய முஷாரப் MP
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி அவர்களை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முசாரப் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சமகால அரசியல் தொடர்பிலும், முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, காணி மீட்பு குறித்தும் மக்கள் நலன் சார்ந்து தனது முன்னெடுப்புகளின் நிலைப்பாட்டையும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முசாரப் இங்கு தெளிவுபடுத்தினார்.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து இயங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.எம்.எம். முசாரப் அவர்களை தான் பார்ப்பதாகவும், சவால்களை வெற்றி கொண்டு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பயணிக்குமாறும் தனது ஆலோசணைகளையும், வாழ்த்துக்களையும் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் செயலாளர் நாயகமாக அல் - ஹாஜ் ஹஸன் அலி தற்சமயம் செயற்பட்டுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)